Malaysia

தோட்டத்து மக்களுக்கு உயிர்கொடுக்கும் மெராந்தி லாப்பான் அருள்மிகு ஶ்ரீ மஹா மாரியம்மன்‌ ஆலயத்தின் கும்பாபிஷேகம்‌ விழா செப்டம்பர் 15 ஆம்‌ தேதியன்று நடைபெறும் -தி.சுப்ரமணியம் தகவல்

ஈப்போ, செப்.10-
ஈப்போ,லகாட், டேசா பிஞ்சி , மெராந்தி லாப்பான் தோட்டத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ‌‌ஶ்ரீ மஹா‌ மாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் வரும்‌ செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெறவிருப்பதாக அதன் அறங்காவலர், தி.சுப்ரமணியம்‌ கூறினார்.

இந்த கும்பாபிஷேகம் செப்டம்பர் 15 காலை 10.35 மணி தொடங்கி 11.30 மணிவரை கும்பத்தில் தீர்த்தம் ஊற்றப்படும். 1982 ஆம் ஆண்டு இந்த ஆலயம் தோட்டத்திலிருந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு புதுபிக்கப்பட்டது.

இப்பொழுது தோட்டத்தில் அமைந்திருக்கும் அழகான ஆலயமாக‌ ஜொலிக்கிறது என‌ தி.சுப்ரமணியம் தெரிவித்தார்.

தோட்டத்து மண் வாசனையில் வாழ்ந்த மக்களின் நினைவலைகளை தூண்டக்கூடிய‌ இந்த ஆலயத்தின்‌ கும்பாபிஷேகம் விழா விற்கு இங்கு வாழ்ந்த தோட்டத்து மக்கள் வருகை புரிய வேண்டும்.

மேலும், ஆலயத்தின் கும்பாபிஷேகத்திற்குகோப்பிங் நாடாளுமன்ற‌ உறுப்பினர், டான் கார் ஹிங், பேராக் மாநில ஆட்சிக்குழு‌ உறுப்பினர் அ.சிவநேசன்‌ஆகியோர்‌ வருகை‌ புரியவிருக்கின்றனர்.

இந்த‌ ஆலயத்தின் கும்பாபிஷேகத்திற்கு அனைத்து பக்தர்களும்‌ கலந்து கொண்டு‌ அம்மனின்‌ தரிசனத்தை பெற வேண்டும். இதுவரை எங்களுக்கு ஆதரவு வழங்கும் அனைவருக்கும் இந்த‌ ஆலயத்தின் கும்பாபிஷேகத்திற்கு அனைத்து பக்தர்களும்‌ கலந்து கொண்டு‌ அம்மனின்‌ தரிசனத்தை பெற வேண்டும் என்று
சுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.

இதுவரை எங்களுக்கு ஆதரவு வழங்கும் அனைவருக்கும் நன்றி.
இந்த விழாவிற்கு நிதி‌ இன்னும்‌ போதாத பட்சத்தில் நிதி திரட்டி வருகிறோம். அதனுடன் நேரடியாக Persatuan Penganut Sri Maha Mariamman பெயரில் இருக்கும் public bank 3103499733 என்ற‌‌ வங்கி கணக்கில் பணம்‌‌ சேர்க்கலாம் என்றார் சுப்ரமணியம்.

இது தொடர்பாக நிதி அல்லது ஆதரவு வழங்க விரும்புவர்கள் 012- 5101253 தி.சுப்ரமணியம் அல்லது 012-5155547 ஆலயத் தலைவரை தொடர்புக் கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button