
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும், எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்! மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் சித்திரை புத்தாண்டு வாழ்த்து
கோலாலம்பூர்,ஏப்.13-
சித்திரை புத்தாண்டை கொண்டாடி மகிழும் அனைத்து மலேசிய இந்தியர்களுக்கும் மனிதநேய மாமணி இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.
இந்த ஆண்டில் நடப்பவை எல்லாம் நல்லவையாக அமைந்து சிறப்புடன் வாழ சித்தரை புத்தாண்டு வழி வகுக்கட்டும்.
பல்லின மக்கள் வாழும் மலேசியத் திருநாட்டில் நாம் சகோதரத்துவத்தை தொடர்ந்து பேணி காப்போம் என்று ரத்னவள்ளி அம்மையார் கூறினார்.

ஒருவரை ஒருவர் மதித்து, விட்டுக் கொடுக்கும் மாண்புடன் அன்பை வளர்ப்போம்.
இனிமையான நினைவுகளோடு இந்த ஆண்டை வெற்றிகரமாக கடப்போம்.
இந்நாட்டில் இந்திய சமுதாயம் கல்வி – பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் பீடு நடை போட வாழ்த்துவதாக ரத்னவள்ளி அம்மையார் தெரிவித்தார்.
சித்திரை புத்தாண்டை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்



