
இந்துக்கள் சமயம், கலை, கலாச்சாரம், பண்பாடு போன்றவைகளை ஒரு போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது மலேசிய இந்திய ஊடகவியலாளர் சங்க தலைவர் -தேசம் ஊடக தோற்றுநர் குணாளன் மணியம் சித்திரை புத்தாண்டு வாழ்த்து
கோலாலம்பூர், ஏப்.13-
இந்துக்கள் சமயம், கலை, கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு போன்றவைகளை சிறிதும் விட்டுக் கொடுக்காமல் அனைத்து விழாக்களையும் கொண்டாட வேண்டும் என்று மலேசிய இந்திய ஊடகவியலாளர் சங்க தலைவரும் தேசம் ஊடகத்தின் தோற்றுநருமான குணாளன் மணியம் வலியுறுத்தியுள்ளார்.
சமயம் என்பது ஒருவரை நெறிப்படுத்தும். அதேநேரத்தில் கலை,கலாச்சாரம் போன்றவைகள் ஒருவரது அடையாளத்தை எடுத்துச் செல்லும் என்பதால் அதனை இந்துக்களாகிய நாம் ஒரு போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று தமது சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குணாளன் மணியம் அவ்வாறு கூறினார்.
நாம் அனைத்து விழாக்களையும் மிகவும் சிறப்பாக கொண்டாட வேண்டும். அந்த வகையில் சித்திரை புத்தாண்டையும் நாம் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட வேண்டும். சித்திரையில் ஏற்படும் மகிழ்ச்சி நித்திரைக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் தொடர வேண்டும். அப்போதுதான் விடியல் நமக்கு மகிழ்ச்சியை கொண்டு வரும் என்று குணாளன் மணியம் தெரிவித்தார்.
இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டு அனைவருக்கும் வலப்பத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வர வேண்டும். இந்த வேளையில் அனைத்து இந்து பெருமக்களுக்கும் குணாளன் மணியம் தமது சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.



