
தெலுக் இந்தான் சித்ரா பெளர்ணமியின் போது ரதம் செல்லும் வழியில் மூன்று நாட்களுக்கு மதுபான விற்பனைக்கு தடை ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் அவர்களுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் முழு ஆதரவு
பினாங்கு,ஏப்.15-தெலுக் இந்தானில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் சித்ரா பெளர்ணமியின் போது ரத ஊர்வலம் வரும் அனைத்து சாலைகளில் உள்ள மதுபானக் கடைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என பேரா மாநில அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக, பேரா மாநில இந்திய சமூக நல விவகாரத்திற்கு தலைமை வகிக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் கூறியிருப்பது தங்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக பி.ப.சங்கம் தனது முழு ஆதரவையும் பாராட்டையும் தெரிவிக்க விரும்புகின்றது.
மிகவும் ஆரோக்கியமான தைரியத்துடன் இந்த திட்டத்தை கொண்டுவந்த சிவநேசன் அவர்களுக்கு பி.ப.சங்கம் பாராட்ட விரும்புவ அச்சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப்பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.
சமயம் சார்ந்த விழாக்களில் மதுபானங்கள் குறிப்பாக மலிவான சாராயங்களை அருந்தி ஒழுக்கமின்றியும்வரம்பு மீறியும் நடைபெரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
சமைய விழாக்களில் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பேணி காக்கபட வேண்டும்.
ரதம் செல்லும் சாலைகளில் உள்ள மதுபானக் கடைகள் மூடப்படுவது மிகச் சிறந்த முடிவாகும்.
இந்த மலிவான சாரயங்களால் பலதரப்பட்ட சமூக சீர்கேடுகள் நடைபெறுகின்றன. இது போன்ற தடை இவற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளியை ஏற்படுத்தும் என்றார் அவர்.
மிகவும் பிரசித்திபெற்ற தெலுக் இந்தான் சித்ரா பெளர்ணமி திருவிழாவின் போது மூன்று நாட்களுக்கு மதுபான கடைகள் முடப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது என சுப்பாராவ் கூறினார்.
இந்த முடிவை எடுப்பதற்கு முயற்சி எடுத்துக்கொண்ட ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அவர்களுக்கும்,பேரா மாநில அரசாங்கத்திற்கும் பி.ப.சங்கம் தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது.
இதேபோன்று மற்ற இடங்களில் நடைபெறும் சமைய விழாக்களின் போதும் ரதம் செல்லும் வழிகளில் அமைந்துள்ள மதுபான கடைகள் மூடப்படுவதற்கு அங்குள்ள இந்திய ஆட்சி குழு உறுப்பினர்கள் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் கேட்டுக்கொள்வதாக சுப்பாராவ் கூறினார்.



