Malaysia

அருள் மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 100 ஆண்டு சித்தரைப் புத்தாண்டு பெரும் திருவிழா

ஈப்போ,ஏப்.15-
பேரா,கம்பார் , ஜாலான் பாருவில் எழுந்தருளியுள்ள அருள் மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் சித்திரைப் புத்தாண்டு பெரும் திருவிழா விமர்சியாக கொண்டாட்டப்பட்டது.

இந்த ஆண்டு 100 ஆண்டு பூர்த்தியானதால் மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்டதாக அதன் ஆலயச் செயலாளர் பாஸ்கரன் வீரன் கூறினார்.

இந்த ஆலயம் எழுந்தருளியுள்ள சுற்றுவட்டாரத்தில் அரசாங்க குடியிருப்பாக இருந்ததால் கடந்த 1925 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இந்த ஆலயம் எழுப்ப ஆதரவு வழங்கியதாகவும் , அன்று முதல் இன்று வரை ஆலயம் முறையே பராமரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இங்கு வசித்து வந்த குடுபங்களைச் சேரந்த பல குடும்பத்தினர் பலர்வெளி ஊர்களிலும் வெளிநாடுகளிலும் வசித்து வருகிறார்கள் , அவர்களில் பலர் இந்த சித்திரைப புதாண்டு விழாவில் கலந்துகொண்டு அம்மாளின் ஆசியை பெற்றுச் செல்கின்றனர்.

இந்த ஆலய சமய வளரச்சிக்கு மட்டும் பாடுபடவில்லை மாறாக பல சமுக்தொண்டுகளை செய்து வருவதாகவும் அதில் வசதி் குறைந்த மாணவர்களுக்கு , குடும்பங்களுக்கு உதவிகளை தொடர்ந்து செய்து வருவதாக பாஸ்கரன் கூறினார்.

இந்த ஆண்டு நூறாவது ஆண்டு விழாவாக கொண்டாடப்படுவதால் வழக்கத்திற்கு மாறாக பல விஷேச்பூஜைகள் நடைபெற்றது்

இவ்விழாவை முன்னிட்டு இம்மாதம் 5 ஆம் தேதி கொடியெற்றப்பட்டு தொடரந்து விஷேச பூஜைகள் நடைபெற்றதுடன் இன்று காலை 6 ஹோமம் காலை்6..30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

காலை 10்.30 முதல் கொண்டு கரகம் ,, பால்குடம் , காவடிகள் , அக்னி சட்டி ஏந்தி பக்தர்க்கள காணிக்கை செலுத்தினர். நண்பகல் 12 மணியளவில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு ஆலய திருவிழா பூஜைகளை பேரா மாநில இந்து அரச்சகர் சங்கம் ஏற்று நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button