
Malaysia
துன் அப்துல்லா படாவி மறைவு பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தம்பதியர் இரங்கல்
கோலாலம்பூர்,ஏப்.15-
மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா படாவி மறைவையொட்டி பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தம்பதியர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
துன் அப்துல்லா படாவி திங்கட்கிழமை கோலாலம்பூர் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் காலமானார்.
துன் அப்துல்லா படாவியின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம் என்று சுல்தான் இப்ராஹிம் தம்பதியர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



