Malaysia

பிறை இல்லாத தேசியக் கொடி ஏற்றுக் கொள்ள முடியாது மாமன்னர் வருத்தம்

கோலாலம்பூர், ஏப்.16-
பிறை இல்லாத தேசியக் கொடி விவகாரத்தில் எந்த காரணத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கூறினார்.

ஒரு நாட்டின் இறையாண்மையை தேசியக் கொடி குறிக்கிறது. அதை கேலி செய்வதுகூடாது.
ஒரு நாட்டின் அடையாளம் கொடி. அது வெறும் வண்ணமயமான வடிவிலான துணியல்ல. மாறாக அது போராட்டம், வரலாறு, சுதந்திரத்தின் அர்த்தம் என்று மாமன்னர் தெரிவித்தார்.

கொடி மக்களின் உணர்வைக் பிரதிபளிக்கிறது.
மக்கள் அதனை தேசபக்தியுடன் பறக்க விடுகின்றனர். அதனை ஒரு போதும் சிறுமைபடுத்தக் கூடாது என்று மாமன்னர் தமது ஆதங்கத்தை முகநூல் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

உள்ளூர் சீன மொழி நாளிதழான சின் சியூ முதல் பக்கத்தில் வெளியிட்ட தேசியக் கொடி படத்தில் பிறை நிலவு இல்லாமல் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button