Malaysia

கலைநிகழ்ச்சிக்காக தீபாவளி கடைகளை அகற்ற செல்வதா? NGOவின் நடவடிக்கை மனிதாபிபானமற்றது டத்தோஸ்ரீ சரவணன் போல் உதவும் மனப்பான்மையை கொண்டிருங்கள் பிரிக்பீல்ட்ஸ் இந்திய சிறு வியாபாரிகள் கொதிப்பு

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

கோலாலம்பூர்,அக்.9
தீபாவளிக்கு கலைவிழா நடத்த மேடை அமைக்க இங்கு அமைக்கப்பட்டுள்ள எட்டு கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கண்டு வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் இந்திய சிறுதொழில் வணிகர்கள் வியாபாரம் செய்ய கோலாலம்பூர் மாநகர் மன்றம் 22 தீபாவளி சந்தை கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

 

இந்த கடைகள் 22 கடைகள் பிரிக்பீல்ட்ஸ் நீர் தேக்கம் எதிர்புறத்தில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் இதர பொருட்களை தற்போது அடுக்கி வரும் நிலையில் மேடை அமைக்க போவதாக கூறி வியாபார கடைகளை அகற்றச் சொல்வதாக கடைக்காரர் குணசீலனின் கூறினார்.

இந்த தீபாவளி கடைகள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென்று 8 கடைகளை அகற்றச் சொல்வது நியாயமா?
ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூட்டரசு பிரதேச துணையமைச்சராக இருந்த போது அவர் பல வழிகளில் வியாபாரிகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளதாக குணசீலன் தெரிவித்தார்.

நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறோம். கடந்தாண்டும் இதேநிலைதான். அப்போதும் டத்தோஸ்ரீ சரவணன் குரல் கொடுத்தார். வேறு எந்த இந்திய எம்பிக்கள் குரல் கொடுத்தனர்?

கலைநிகழ்ச்சிக்கு வந்து போவது விஷயமல்ல. மக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும். அப்படி கேட்டவர் டத்தோஸ்ரீ சரவணன். இதற்கு நன்றி கடனாக டத்தோஸ்ரீ சரவணன் மற்றும் டத்தோஸ்ரீ அன்வார் ஆகிய இருவரின் புகைப்படங்கள் அடங்கிய பதாதைகளை கட்டினோம். அதனையும் கேள்வி கேட்கிறார்கள் என்று குணசீலன் சாடினார்.

இந்த தீபாவளி கடைகளை அமைக்கும் முன்னர் மேடை போடும் தகவல் அந்த NGOகளுக்கு தெரியாதா? கடைகளை அமைத்த பின்னர்தான் அந்த கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா?
B40 மக்களின் வியாபாரம் முக்கியமா அல்லது கலைநிகழ்ச்சிக்கு மேடை அமைப்பது முக்கியமா? பக்கத்தில் இருக்கும் வேறு இடத்தில் மேடை அமைக்க கூடாதா? இது எந்த வகையில் நியாயம் என்று கடைக்காரர் குணசீலனின் கேள்வி எழுப்பினார்.

பிரிக்பீல்ட்ஸ் இந்திய சிறு தொழில் வர்த்தக சங்கத்தின் முயற்சியில் எங்களுக்கு கடைகள் கிடைத்துள்ளது. ஆனால், மேடையை காரணம் காட்டி 8 கடைகளை அகற்ற வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தீபாவளி கலைவிழா நடத்த இடம் உள்ளது. அந்த இடத்தில் மேடையை அமைத்து கொள்ளலாம். எங்கள் வயிற்றில் அடிக்க வேண்டாம் என்று வியாபாரிகள் சார்பில் குணசீலன் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button