
Malaysia
சென்னை குடிநீர் திட்டம்
சென்னை,ஏப்17-சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு 70.32% ஆக உள்ளது
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில், இன்றைய நிலவரப்படி 8.268 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

இதனிடையே,கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத் தறி தொழிலாளர்கள் போராட்டத்திற்கு மிக விரைவில் உடனடியாக தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பேரவையில் அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலி உயர்வு கோரி விசைத்தறி கூலித் தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.



