Malaysia

ஊடகவியளார்கள், ரசிகர்கள் மழையில் நனைந்த கொடுமை!!! இதுதான் இசை மழையில் நனைவது என்பார்களா? இளையராஜா இசை நிகழ்ச்சியில் ஏற்பாட்டாளர்கள் அலட்சியம் ஏன்?

தேசம் அதிரடி அலசல் குணாளன் மணியம்

புக்கிட் ஜாலில், ஏப்.5-
கோலாலம்பூர்-சிலாங்கூர் ஆகிய இரு மாநிலங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இளையராஜா இசைநிகழ்ச்சியில் ஊடகவியலாளர்கள்-ரசிகர்கள் மழையில் நனைந்தபடி இசை நிகழ்ச்சியை பார்த்தது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஊடகவியளார்கள், ரசிகர்கள் மழையில் நனைந்த்து கொடுமைதான்.
இதுதான் இசை மழையில் நனைவது என்பார்களா?
இளையராஜா இசை நிகழ்ச்சியில் ஏற்பாட்டாளர்கள் அலட்சியம் ஏன்? எனும் கேள்வி எழுந்துள்ளது.

இது மழைக்காலம் என்பதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூரையுடன் கூடிய அரங்கில் நிகழ்ச்சியை நடத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து திறந்தவெளி ஹாக்கி ஸ்டேடியத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சியை நடத்தி ரசிகர்களை மட்டுமன்றி ஊடகவியலாளர்களையும் நனைய விட்டது தவறு என்று ரசிகர்கள் பலரும் குறைபட்டுக் கொண்டனர்.

இந்த திறந்தவெளி ஹாக்கியல ஸடேடியத்தில் முன் சுற்றுப்பகுதி கூடாரம் உள்ளதாகவும் நடுப்பகுதி மழையில் நனையும் வகையில் இருந்ததாகவும் தெரிகிறது. ரசிகர்கள் பலர் மழையில் நனைந்தபடி நிகழ்ச்சியை பார்த்தது வேதனையளிக்கிறது.
ஊடகவியலாளர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை இப்படியா மழையில் நனைய வைப்பது? இதற்கு இளையராஜா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button