
அமானா இக்தியாரின் பெண் திட்டத்திற்கு பத்து கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு இந்திய பெண் தொழில்முனைவோரை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் டத்தோஸ்ரீ ரமணன நம்பிக்கை
தேசம் செய்திகள் ஹரி ஸ்ரீநிவாஸ்
ஸ்ரீ டமான்சாரா, ஜூன் 3-
மலேசியா மடானி கொள்கைக்கு ஏற்ப அமானா இக்தியார் மலேசியாவின் பெண் திட்டத்தின் வழி இந்திய பெண் தொழில்முனைவோரை அடுத்த கட்ட வளர்ச்சிப் பாதைக்கு முன்னேற்ற முடியும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர் இரமணன் கூறினார்.
பெண் திட்டமானது பெணகள் வளப்பம், ஆளுமை, புதிய வழமை எனும் புதிய அணுகுமுறையின் வழி வியாபாரக் கடனுதவியாக மேலும் மில்லியன் கூடுதல் நிதி பகிர்ந்தளிக்கப்படும். இதன் வழி அமானா இக்தியாரின் பெண் புதிய திட்டத்திற்கு பத்து கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் பெண் திட்டத்திற்கு ஐந்து கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்போது இந்திய பெண் தொழில் முனைவர்களுக்காக பத்து கோடியாக உயர்த்தப்ப்டுள்ளது என்று டத்தோஸ்ரீ ரமணன் சொன்னார்.
இந்திய பெண்களின் சுய முன்னேற்றத்திற்கு வழிகோழும் இன்னொரு புதுமை முயற்சிதான் இது என்று செவ்வாய்க்கிழமை பண்டார் ஸ்ரீ டாமன்சாராவில் அமைந்துள்ள ஏ.ஐ.எம். தலைமையகத்தில் ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாபெரும் விழாவில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டத்தோஸ்ரீ ரமணன் வெளியிட்டார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பெண் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. இதுவரை 6,247 பெண் தொழில் முனைவோருக்கு 4 கோடியே 27 லட்சத்து 25,640 வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.
6,247 பெண் தொழில் முனைவோரில் 1,062 பேர் புதிய தொழில் முனைவோர் ஆவார் என்று டத்தோஸ்ரீ ரமணன் தமது உரையில் தெரிவித்தார்.
வரலாற்றுப்பூர்வ கூடுதல் நிதி ஒதுக்கீடு அறிவிப்பு நிகழ்ச்சியில் அமானா இக்தியார் தலைமை நிர்வாகி டத்தோ ஷாமிர் அஜிஸ், முகமட் நஜிப், தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சரின் சிறப்பு அதிகாரி டத்தோ அன்புமணி பாலன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



