Malaysia

தாப்பா தமிழன் ஏற்பாட்டில் ஒன்பதின்மர் காற்பந்து போட்டி விளையாட்டில் தாப்பா தமிழன் எப்.சி. அணி வெற்றி

தாப்பா, ஜூன் 5-

இளைஞர்களை ஒன்றினைக்கும்‌‌ முயற்சியாகவும்‌ அவர்கள் விளையாட்டுத் துறையில் தொடர்ந்து‌ ஈடுப்பட‌ செய்வதை முன்னிட்டு தாப்பா தமிழன் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒன்பதின்மர் காற்பந்து போட்டி விளையாட்டில் தாப்பி தமிழன் எப்.சி. வெற்றி அடைந்து 6060 வெள்ளியை தட்டிச் சென்றனர்.

தாப்பா தமிழன்‌ எப்.சி. தலைவரான விக்ரம் முனியாண்டி எனப்படும் அப்பு தவைமைத்துவத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரண்டாவது‌ பரிசான 3030 வெள்ளியை ஸ்டே எலோன் எப்.சி. பெற்றனர்.

அடுத்து ஜெண்ராத்தா எப்.சி. மூன்றாவது‌ பரசு 1010 வெள்ளியை பெற்றனர். தொடர்ந்து , சாங்காட் ரெஞ்சர்ஸ் நான்காவது பரிசான 505 வெள்ளியை வென்றனர்.

இதனிடையே , தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர், எம்.சரவணன் , ஒன்மர் காற்பந்து போட்டியை நடத்திய தாப்பா தமிழன் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

வருடந்தோறும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யும் இது போன்ற போட்டிகள் ஆரோக்கியமானது. அவர்களுக்கு நான் என்றும் ஆதரவாக‌ இருப்பேன்‌ என்றார்.

இந்த போட்டி தாப்பா துன் அமாட் சார்ஜி அரங்கத்தில் நடைபெற அதில் 24 அணிகள்‌ பங்கைற்றனர்.

மேலும் காற்பந்து அணிகளுக்உ வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்பாட்டுக் குழுவினர் செய்தனர்.

இந்த ஒன்பதின்மர் காற்பந்து போட்டிக்கு பெரும் ஆதரவு வழங்கிய டத்தோஶ்ரீ சரவணன் மற்றும் நன்கொடையாளர்களுக்கும் விக்ரம் நன்றியை தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button