
Malaysia
ஈப்போ மாநாகர மன்ற உறுப்பினர் ரமேஷ் சுப்ரமணியத்தின் தீபாவளி அன்பளிப்பு
ஈப்போ,அக்.26-
நாடு தழுவிய நிலையில் தீபாவளி சமயத்தில் மக்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் வசதிகுறைந்த மக்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அந்த வகையில் பண்டிகை காலங்களில் யாருமே வறுமையின் காரணமாக விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக ஈப்போ மாநகரமன்ற உறுப்பினர் ரமேஷ் சுப்ரமணியம் பெர்ச்சாம் சட்டமன்றத்தை சேர்ந்த மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கம்போங் தாவாஸ் கிராமத் தலைவர் டேவிட் வருகை புரிந்த மக்களுக்கு பொருட்களை வழங்கினார். இந்த பொருட்களை பெற்றுக் கொண்ட மக்கள் ரமேஷிற்கு நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



