Malaysia

இந்து சங்கத்தில் 5 மாநிலங்களில் தலைமைத்துவம் மாற்றம் பொன்.சந்திரன் மீண்டும் பேராக் மாநில இந்து சங்க தலைவராக நியமனம்

ஈப்போ, ஆக.14-

பேராக் மாநில இந்து சங்க தலைவராக

மீண்டும் பொன்.சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த 9.8.2025( சனிக்கிழமை) நடைபெற்ற மத்திய செயலவை உறுப்பினர்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய தேசிய இந்து சங்க பேரவையின் தலைவர் தங்க.கணேசன் தமறிக்கையில் கூறியுள்ளார்.

 

பேராக் மாநில இந்து சங்கத்தை போன்று மேலும் நான்கு மாநிலங்களில் தலைமைத்துவம் மாற்றம் கண்டுள்ளது. அவற்றில் சிலாங்கூர், விலாயா, மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மலேசிய இந்து சங்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் சில மாநில தலைமைத்துவம் மாற்றம் காணப்பட்டுள்ளது. இது மத்திய செயலவை உறுப்பினர்களின் முடிவாகும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.

 

அதன் அடிபபடையில் பேராக் மாநில இந்து சங்க தலைவராக பொன்.சந்திரன் மற்றும் அவர் தம் செயலவையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

அவர்களில் துணைத்தலைவராக ப.பத்மா தேவி, உதவித்தலைவர்(1) ந.சுந்தர் ராஜு, உதவித்தலைவர்(2) சு.இராமலிங்கம், செயலாளர் தி.கண்மணி, துணை செயலாளராக கா.சுகாஷிணி, பொருளாளர் மு.யோகேஸ்வரன், துணை பொருளாளர் கு.கோபால் நாயர், மகளிர் பிரிவு ஜெ.மகேஸ்வரி, இளைஞர் பிரிவு அ.கோபி்நாயுடு.

 

இந்த புதிய நிர்வாகத்தின் வாயிலாக இணக்கத்தை அதிகரிக்கலாம். அதோடு, மத்திய செயலவையினருக்கும் மாநில நிர்வாகத்திற்கும் நல்லதொரு உறவுப்பாலம் அமையலாம் என்று அவர் தம் கருத்தை பதிவிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button