
வரலட்சுமி நோன்பு முன்னிட்டு ஈப்போ லகாட் ஶ்ரீ மஹா லக்ஷ்மி சமேத ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை
ஈப்போ, ஆக.14-
கணவனின் ஆயுள் நீடிக்க வேண்டும். பெண்கள் சுமங்கலியாக அனைத்து வரங்களுடன் மகிழச்சியாக கணவருடன் இருக்க வேண்டும் என திருமணமான பெண்கள் செய்யும் முக்கிய பூஜை வரலட்சுமி நோன்பு. அந்த வகையில் இந்த உன்னத தினத்தை நேற்று ஈப்போ லகாட் ஶ்ரீ மஹால்ட்சுமி சமேத ஶ்ரீ பெருமாள் ஆலயத்தில் சிறப்பாக நடத்தினர்.
காலையில் மகாலட்சுமி அம்பாளுக்கு அபிஷேகம் தொடங்கி, சிறப்பு பூஜை என அனைத்துமே சிறப்பாக நடைபெற்றது.
பின்னர், விஷேஷ சோடச உபசார பூஜை இடம்பெற ஏராளமான பக்தர்கள் இந்த வரலட்சுமி பூஜையில் மகாலாட்சுமியை தரிசனம் செய்தனர்.
அதனுடன் நித்திய பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைப்பெற ஏராளமான சுமங்கலிகள் அப்பூஜையில் பங்கேற்றனர். இந்த திருவிளக்கு பூஜை இனிதை நடைபெற்றது.
இதனிடையே, பேராக் மாநில அர்ச்சகர் சங்க தலைவர் சிவஶ்ரீ தினேஷ் குருக்கள் பூஜை சிறப்பாக வழிநடத்தினார்.
மேலும், காலை தொடங்கி மாலை வரை வரலட்சுமி நோன்பு பூஜை சிறப்பாக நடைபெற உதவிக்கரம் புரிந்த அனைவருக்கும் ஆலய செலாளர் பூமதி தமிழ்ச்செல்வம் நன்றி கூறினார்.
இந்த திருவிழாவில் கம்போங் கெப்பாயாங் ஶ்ரீ சிவசுப்ரமணியம் ஆலயத்தின் பிரதான குருக்கள் சரவணன் குருக்கள் காலை பூஜையை வழிநடத்தினார்.
மேலும், வரலட்சுமி நோன்பு திருவிழாவின் அன்னதானத்திற்கு யுவனேஸ்வரன் – தர்ஷினி, டத்தோ ஆர்.தங்கராஜா- பரமேஸ்வரி, விக்னேஷ் கேத்திரிங் விக்னேஷ்குமார்- சுபத்திராதேவி ஆகியோர் பொறுப்பேற்றனர்.



