Malaysia

அம்மாவை மேடையில் ஏற்றும் கனவு மெய்ப்பட்டன ! கிஷேந்திரனின் நெகிழ்ச்சியான தருணம் 

தேசம் செய்திகள் கவியரசன் அன்பரசன்

மலாக்கா,ஆக.19-

ஜாலான் பங்சார் தமிழ்ப்பள்ளியில் முன்னாள் மாணவர் கிஷேந்திரன் குணசேகரன் (23) இன்று மலாக்கா போலிடெக்னிக்கில் கணக்கியல் துறையில் முழு மதிப்பெண்களைப் பெற்று ஒட்டுமொத்த சிறந்த மாணவராக சாதனை படைத்துள்ளார்.கிஷேந்திரன் இந்த 6 தவணைகளிலும் 4.00 ஒட்டுமொத்த சிறந்த அடைவுநிலையைப் பெற்று போலிடெக்னிக்னின் ” இயக்குனர் விருது , கல்வித்துறை , புறப்பாடத்துறை என 3 பிரிவுகளிலும் உயரிய விருதுகளை மலேசிய போலிடெக்னிக் , Kolej Komuniti கல்லூரியின் தலைமை இயக்குனரான டத்தோ டாக்டர் முகமட் சஹாரி இஸ்மாயில் அவர்களிடமிருந்து பெற்றார்.

 

23 ஆவது மலாக்கா போலிடெக்னிக் மாபெரும் பட்டமளிப்பு விழாவில் ஆயிரக்கணக்கான மாணாக்கர்கள் மத்தியில் கைத்தட்டல் மிகுந்த ஆரவாரத்தோடு மாணவர் கிஷேந்திரன் சிவப்பு கம்பள விரிப்பில் வரவேற்கப்பட்டு மேடையில் கௌரவப்படுத்தினார்.குடும்பத்தின் 3 வது புதல்வனான கிஷேந்திரன் தனது எஸ்.பி.எம் தேர்வில் 8 ஏக்கள் பெற்ற தருணத்தில் தனது தாயரை மேடையில் ஏற்றிப் பார்க்கும் கனவை கொண்டிருந்தாலும் கோவிட் பெருந்தொற்று காரணமாக தம்மால் அக்கனவை நனவாக்க இயலாமல் போனது.ஆனால் பழம் நழுவி பாலில் விழுந்த தருணமாக தனது மேற்கல்வியில் அனைத்து 3 உயரிய விருதுகளையும் தன்வசப்படுத்தி யாவரும் கைத்தட்டி ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் விழாக்கோலம் பூண்ட காட்சி தம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது என்றார் கிஷேந்திரன் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button