
கணக்கியல் துறையில் 3 உயரிய விருதுகளைத் தன்வசப்படுத்திய மாணவர் கிஷேந்திரன் குணசேகரன்
கணக்கியல் துறையில் 3 உயரிய விருதுகளைத் தன்வசப்படுத்திய மாணவர் கிஷேந்திரன் குணசேகரன்
தேசம் செய்திகள் கவியரசன் அன்பரசன்
மலாக்கா,ஆக.19- போலிடெக்னிக்கின் 23 ஆவது மாபெரும் பட்டமளிப்பு விழாவில் இவ்வாண்டு 1398 மாணவர்கள் வெற்றிகரமாக தங்களது டிப்ளோமா பட்டப்படிப்பினை முடித்தனர்.மாபெரும் சபைதனில்
நீ நடந்தால் உமக்கு மாலைகள் விழவேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த அரிய நிகழ்வில் கோலாலம்பூர் பந்தாய் டாலாமைச் சேர்ந்த மாணவர் கிஷேந்திரன் குணசேகரனுக்கு 3 உயரிய விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டன.
தனது வாழ்நாளில் முதன்முறையாக பெற்றோர்கள் குணசேகரன் முத்து , அமிர்தம் கணேசன் அவர்களோடு மாபெரும் மேடையில் ஒட்டுமொத்த சிறந்த மாணவர் பட்டத்துடன் மாதிரி காசோலை , நற்சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் பெற்று கௌரவித்தார்.நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கிஷேந்திரன் தனது தற்பொழுது GLOBE ENGINEERING SDN BHD நிறுவனத்தில் நிர்வாகம் மற்றும் கணக்கியல் துறையில் முக்கிய பொறுப்பில் பணியாற்றுவதாக தெரிவித்தார்.தொடர்ந்து தனது இளங்கலை பட்டப்படிப்பினை USM அல்லது UKM பல்கலைக்கழகத்தில் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.இவ்வேளையில் தமது வெற்றிக்கு முதுகெலும்பாக திகழ்ந்த பெற்றோர்கள்,விரிவுரையாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது உளமார்ந்த நன்றிகளை புலப்படுத்திக் கொண்டார் கிஷேந்தரன்.



