
Malaysia
திமோர் லெஸ்தேவில் தடையற்ற ரோமிங் டேட்டா சேவையை மலேசியர்கள் பெற ஏற்பாடு
- புத்ராஜெயா,அக்.26- திமோர் லெஸ்தேவில் உள்ள மலேசியர்கள் தற்போது வசதியான, மலிவு விலையில் ரோமிங் டேட்டா சேவைகளை பெற முடியும் என்று தகவல் தொடர்பு அமைச்சு ஒரு அறிக்கையில் கூறியது. நாட்டின் முக்கிய கைத்தொலைபேசி நெட்வொர்க் ஆப்ரேட்டர்கள் சேவையை செயல்படுத்தியுள்ளதால் அங்குள்ள மலேசியர்களுக்கு வசதியான ரோமிங் டேட்டா கிடைக்கும் என்று அந்த அறிக்கை கூறியது. கடந்த அக்டோபர் 17 முதல் செல்காம் டிஜி, மேக்சிஸ், டிஎம், யூ மொபைல் ஆகிய நான்கு முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திமோர் லெஸ்தேவில் ரோமிங் டேட்டா சேவைகளை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சு தெரிவித்தது. இந்த வெற்றி மலேசியாவின் ஆசியான் தலைமைத்துவம் 2025 இன் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



