
கோல குபு பாரு இடைத்தேர்தலில் அனைத்து இந்திய கட்சிகளும் ஒரு வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தது வரலாற்றுப் பதிவு டத்தோஶ்ரீ எம்.சரவணன் கருத்து
தேசம் செய்திகள் குணாளன் மணியம், ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோல குபு பாரு, மே 15-
கோல குபு பாரு இடைத்தேர்தலில் அனைத்து இந்திய கட்சிகளும் ஒரு வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரலாற்று பதிவை கொண்டு வந்த தேர்தலாகும் என்று ம.இ.கா தேசிய துணைத்்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வர்ணித்துள்ளார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் முடிவெடுத்திருந்தார்.
இந்திய சமுதாயத்தின் நலன கருதி பகைமையை மறந்து அனைத்து கட்சிகளுடன் மஇகா இணைந்து செயல்பட்டது. இதன் பலனாக இந்த தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் வெற்றி பெற்றது. இந்த வெற்றி அனைவருக்குமான வெற்றி என்று கெர்லிங்கில் இந்த வெற்றிக்கு பாடுபட்டவர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்வில் உரையாற்றுகையில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ சரவணன் அவ்வாறு கூறினார்.

ஆட்சியில் இருந்த போது மஇகா பட்டப்பாடு, அக்கட்சி எதிர்கொண்ட சவால்கள் என்ன என்பது பலருக்கு இப்போது புரிகிறது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த போது மஇகாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பதவியில் உள்ளவர்கள் எதையுமே செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டியதாக டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
பதவி இருக்கும் போது நாங்கள் பட்டப்பாடு, அறைகூவல்கள், சவால்கள் ஆகியவை இப்போதுதான் பலருக்கு புரிகிறது. ஏனெனில் தற்போதைய அரசையும் சம்பந்தப்பட்டவர்கள் சாடி வருகின்றனர். இதன்வழி ம.இ.காரன் நிலைமை எப்படி இருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள் என்று டத்தோஶ்ரீ சரவணன் சொன்னார்.
இந்த நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராயுடு, ம.இ.கா தலைவர்கள், பொதுமக்கள் என்று சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



