
MalaysiaPMX - Datuk Seri Anwar Ibrahim
இந்திய சமூக முன்னேற்றத்திற்கு கல்வி, திறன் வளர்ச்சி, வேலைவாய்ப்பே முக்கியம்: பிரதமர் அன்வார்
தி. கிரிஷன்
கோலாலம்பூர், ஜூலை 24 – மலேசிய இந்திய சமூகத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் தரமான கல்வி, முழுமையான நலத்திட்ட உதவிகள், திறன் மேம்பாடு மற்றும் சிறந்த வேலைவாய்ப்புகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.நேற்று வெளியிட்ட நமது முகநூல் பக்கத்தில் இந்திய சமூகத் தலைவர்களுடனான சந்திப்பின்போது இந்த முக்கிய அம்சங்களை வலியுறுத்தியதாக அன்வார் கூறினார். மித்ராவும் தொடர்புடைய ஏனைய அமைப்புகளும் சமூகத்துடன் தொடர்பில் இருந்து, மக்களின் உண்மையான தேவைகளை கண்டறிந்து, செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் உண்மையில் உதவி தேவைப்படுவோருக்கு பயனளிப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.



