
முருகன் கீர்த்தனைகளை பாடி அசத்திய ஈப்போ சப்தஸ்வர சங்கீதலாயா இசைக்கல்லூரி மாணவர்கள்
குருவின் ஆசியோடு பெற்றோர்களின் ஆதரவோடு சிறப்பான முருகன் கீர்த்தனைகளை பாடி அசத்திய ஈப்போ சப்தஸ்வர சங்கீதலாயா இசைக்கல்லூரி மாணவர்கள்
ஈப்போ, டிச.31-
முருகப் பெருமானுக்கு புகழாராம் சூட்டும் வகையில் 9 கீர்த்தனைகளை சமய நெறியோடு சமரப்பணம் செய்வதில் முன்னணி வகித்து ஈப்போ சப்தஸ்வர சங்கீதலாயா இசைக்கல்லூரி சிறப்பான படைப்பினை ஈப்போ குகை முருகன் கோவிலில் முன் வைத்தனர்.
ஈப்போ சப்தஸ்வர சங்கீதலாயா இசைக்கல்லூரியின் இயக்குனர், தோற்றுநர், யமுனா ஆறுமுகம் தலைமையில் “ஷண்முகப்பிரியா சமர்ப்பணம் ” நிகழ்வு அற்புதமா காலையில் 9 மணிக்கு தொடங்கியது.
அந்த நிகழ்வில் பெற்றோர்கள் பெரும் ஆதரவு வழங்கி, முருகன் கீர்த்தனைகளை மனதார பாடினர். வையிலின், மிருதங்கம் என் இசைக்கருவிகளோடு படைப்பு சிறப்பாக அமைந்தது.
குகையின் எதிரொலியில் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது. மேலும் , இது முற்றிலும் இலவசமான நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




