Malaysia

நெகிரி செம்பிலான், செனாவாங், போரஸ்ட் ஹட்சில் உலக தரம் வாய்ந்த நவீன பாலர் பள்ளியாக சன் சைன் கிட்ஸ் பாலர் பள்ளி திகழும் நிறுவனர் டாக்டர் R.V. ஷாம்பிரசாத் நம்பிக்கை

தேசம் செய்திகள் குணாளன் மணியம், ஒளிப்பதிவாளர் ரேவதி குணாளன்

சிரம்பான்,பிப்.29-

சன் சைன் கிட்ஸ் பாலர் பள்ளி நெகிரி செம்பிலான் மாநிலத்தின் உலகத்தரம் வாய்ந்த பாலர் பள்ளியாக அனைத்து வசதிகளுடன் செய்யல்படவிருப்பதாக சன் சைன் கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தாளாளர் டாக்டர் R.V. ஷாம்பிரசாத் கூறினார்.

இது சன் சைன் கிட்ஸ் பாலர் பள்ளியின் நான்காவது பிரீமியம் கிளையாகும். இந்த பள்ளியில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் வசதிகள் கொண்ட உலகத் தரம் வாய்ந்த வகுப்பறைகளோடு கூடிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சன் சைன் கிட்ஸ் பாலர் பள்ளி அறிமுகவிழாவில் டாக்டர் R.V. ஷாம்பிரசாத் அவ்வாறு தெரிவித்தார்.

சன் ஷைன் கல்விக் குழுமத்தின் நான்காவது கிளையான சன் சைன் கிட்ஸ் பாலர் பள்ளி சிரம்பான் செனாவாங்கில் கடந்த பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக தொடங்கப்பட்டது.
இந்த புதிய கிளையை நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சுகாதாரத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் YB ஹாஜா தெங்கு சம்ரா தெங்கு சுலைமான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்த தொடக்க விழாவில் YB ஹாஜா தெங்கு சம்ரா பேசினார். சன் சைன் கிட்ஸ் பாலர் பள்ளியின் தலைமையகம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த பள்ளி நெகிரி செம்பிலான் பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சிறந்த கல்வியை வழங்கிக் கொண்டிருக்கிறது அவர் என்று தெரிவித்தார்.

மேலும் இப்போது உலகமயமாக்கப்பட்ட இடத்தில் மாணவர்களுக்கான சிறந்த கல்வியை வழங்கிக் கொண்டிருக்கும் சன் ஷைன் கல்வி குழுமத்திற்கு மகத்தான நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஹாஜா தெங்கு சம்ரா சொன்னார்.

இந்த நிகழ்ச்சியில் மேலும் Sentosa சட்டமன்ற உறுப்பினர் YB டாக்டர் குணராஜ் மற்றும் நெகிரி மாநிலத்தின் முன்னாள் துணை சபாநாயகர் டத்தோ ரவி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.கடந்த 2012ஆம் ஆண்டு சன் சைன் கிட்ஸின் முதல் கிளை போர்ட்டிக்சன் பகுதியில் தொடங்கப்பட்டது. அடுத்த கிளை தெலுக்கெமாங் பகுதியில் தொடங்கப்பட்டது. இதன் மூன்றாவது கிளை சிரம்பான் 2 சென்டரியோ பகுதியில் தொடங்கப்பட்டது. நான்காவது கிளையாக நவீன வசதிகளோடு செனாவாங் ஃபாரஸ்ட் அயிட் பகுதியில் துவக்கப்பட்டுள்ளது.

சன் சைன் கிட்ஸ் பாலர் பள்ளியின் ஐந்தாவது கிளை அடுத்ததாக நீலாய் பகுதியில் புதிய நவீன வசதிகளோடு துவக்கப்பட உள்ளது.

மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு  வருகை புரிந்த அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் நெகிரி செம்பிலான் பகுதியை சார்ந்த பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதன்மை முதல்வர் திருமதி பரமேஸ்வரி மற்றும் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் செய்திருந்தனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களை வரவேற்க சிங்க நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button