Malaysia

மித்ரா பணிக் குழுத் தலைவர் பிராபாகரனுக்கு நெருக்குதல் கொடுப்பது யார்? வீ.கணபதிராவ் கேள்வி

கோலாலம்பூர், மார்ச் 12-
மித்ரா பணிக் குழுத் தலைவர் பொறுப்பில் இருக்கும் பிரபாகரனை சுதந்திரமாக வேலை செய்ய விடுங்கள் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தியுள்ளார்.

மித்ரா பணிக் குழுத் தலைவராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிராபாகரன் சிறந்த சிந்தனை கொண்ட இளைஞர். அவரது பாணியில் செயல்பட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் .

இந்த மி்த்ரா பணிக்குழுவில் பிரபாகரன் செயல்படுவதில் இருந்து தடுக்கப்படுகிறாரா என்று கணபதிராவ் கேள்வி எழுப்பினார்.

மித்ரா பணிக் குழுத் தலைவர் என்பது மிகவும் முக்கியமான பொறுப்பாகும். இதில் பிரபாகரன் சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கணபதிராவ் கூறினார்.

கடந்த காலங்களில் மித்ரா பணிக் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். ஆனால் சில விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பியதால் நான் நீக்கப்பட்டேன்.
அதன் பின் பிரதமர் துறையின் கீழ் இருந்து மித்ரா தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு மாற்றப்பட்டது. அதற்கும் நான் கேள்வி எழுப்பினேன் என்று கணபதிராவ் தெரிவித்தார்.

தற்போது மித்ரா பணிக் குழுவின் தலைவராக பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நான் முழு ஆதரவு தந்தேன்.
ஆனால் அக்குழுவின் தலைவராக இருந்து செயல்பட அவர் தடுக்கப்படுகிறாரா என்பதுதான் தனது கேள்வி என்று கணபதிராவ் சொன்னார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button