
ஓம் தேவா ஸ்ரீ மதுரைவீரன் ஆலயத்திற்கு 3,000 வெள்ளி நிதி சியா பாவ் ஹியான் வழங்கினார்
ஈப்போ, மார்ச் 12–
ஜெலாப்பாங் , தம்பாஹான் பாருவில் அமைந்திருக்கும் ஓம் தேவா ஸ்ரீ மதுரைவீரன் ஆலயத்தின் 35ஆம் ஆண்டு திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.

அந்த திருவிழாவிற்கு ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர், சியா பாவ் ஹியான் 3000 வெள்ளி நிதி வழங்கினார். அலுவலக பணி காரணமாக சியா திருவிழாவிற்கு வர இயலாததால் அவருடைய பிரதிநிதியாக ஜெலாப்பாங் பாரு கிராம தலைவர், இப் கிம் பாட் சிறப்பு வருகை புரிந்தார்.

அவருக்கு ஆலயத் தலைவர், எஸ்.மணிவேல், துணைத் தலைவர், கே.சண்முகம் ஆகியோர் இணைந்து மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.
இந்த திருவிழாவில் 5,000 பேருக்கு அன்னதானம் பாரம்பரிய முறையில் வாழையிழை பரிமாறலில் உணவு வழங்கப்பட்டது.
இதனிடையே, ஆலய உரிமையாளர், தீபன் சக்கரவரத்தி சிற்ப்பாக நிர்வாகத்தினருடன் செயலாற்றினார்.

சுற்று வட்டார பக்தர்கள் புடை சூழ மதுரைவீரன் ஐயாவை தரிசனம் செய்தனர். மேலும், அஸ்த காளி உருமி மேளம் குழுவினர் முழக்கத்துடன் திருவிழா கலை கட்டியது. மேலும், பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என நிர்வாத்தினர் கேட்டுக் கொண்டனர்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



