Malaysia

அரச மன்னிப்பு டத்தோஸ்ரீ நஜிப் விடுதலையா?

கோலாலம்பூர், ஜன.30

அரச மன்னிப்பு அடிப்படையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மன்னிப்பு வாரியத்தால் மன்னிக்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.

இந்த தகவலை உத்துசான் மலேசியா உறுதிப்படுத்தியுள்ளது. எஸ்ஆர்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு டத்தோஸ்ரீ நஜீப் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அரச மன்னிப்பு கோரி அவர் விண்ணப்பம் செய்துதிருந்தார். இவ்விவகாரம் குறித்து நடைபெற்ற அரச மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்ட முடிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால் நஜீப்பிற்கு அந்த மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என அவ்வூடக செய்தி குறிப்பிட்டுள்ளது.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button