
Malaysia
கோல குபு பாரு மக்கள் ஆதரவில் பாங் வெற்றி பெறுவார் பாப்பாராயுடு உறுதி
உலு சிலாங்கூர், மே 11-
கோல குபு பாரு மக்கள் ஆதரவில் பாங் வெற்றி பெறுவார் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்
பாப்பாராயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் கோல குபு பாரு மக்களின் ஆதரவை பெற்றுள்ளதால் வாக்காளர்கள் பாங்கை தேர்வு செய்வார்கள் என்று பாப்பாராயுடு கூறினார்.
கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் காலை 8 மணி தொடங்கி வாக்காளர்கள் தங்களின் ஜனநாகக் கடைமையை நிறைவேற்றி வருகின்றனர்.
வாக்களிப்பு மையங்களுக்குச் சென்று நிலவரங்களைக் கண்டறிந்து வருகிறேன். நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் சோக் தாவின் வெற்றியைக் கோல குபு பாரு மக்கள் உறுதி செய்வார்கள் என்று நம்புவதாக பாப்பாராயுடு சொன்னார்.



