
பண்டார் சௌஜானா புத்ரா வட்டாரத்தில் ஒரு மில்லியன் மக்களுக்கு முதல் நவீன நிபுணத்துவ தனியார் மருத்துவமனை மாஹ்சா நிபுசத்துவ மருத்துவமனை விரைவில் செயல்பட தொடங்கும் தான்ஸ்ரீ ஹனிஃபா அறிவிப்பு
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
பண்டார் சௌஜானா புத்ரா, மே 8-
நாட்டின் முதல் நவீன மருத்துவமனையாக திகழவிருக்கும் மாஹ்சா மருத்துவமனை விரைவில் கோலாகலமாக திறப்பு விழா காணும் என்று மாஹ்சா குழுமத்தின் தலைவர் தான்ஸ்ரீ டாக்டர் ஹனிஃபா அப்துல்லாஹ் அறிவித்துள்ளார்.

மாஹ்சா நவீன நிபுணத்துவ மருத்துவமனை பல்வேறு சிகிச்சை வசதிகளை கொண்டிருக்கும். 4 ஏக்கர் நிலப்பரப்பில் 6 மாடிகளுடன், 250 உள்நோயாளிகளுக்கான சிகிச்சைக் கட்டில்கள் என அனைத்து அதிநவீன வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக மாஹ்சா மருத்துவமனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான்ஸ்ரீ ஹனிஃபா கூறினார்.
மாஹ்சா தாதியர் கல்லூரியின் வழி தனது மருத்துவக் கல்விப் பயணத்தை தொடங்கிய மாஹ்சா நிறுவனம் இன்று பண்டார் சௌஜானா புத்ராவில் மிகப்பெரிய கல்வி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
அனைத்துலகப் பள்ளி, கல்லூரி, பல்கல்கலைக்கழகம் என மாஹ்சா கல்வித் துறையில் மாஹ்சா நிறுவனம் பீடுநடை போட்டு வருவதாக தான்ஸ்ரீ ஹனிஃபா தெரிவித்தார்.

இந்த சூழலில் மாஹ்சா தற்போது பிரமாண்டமான முறையில் நவீன நிபுணத்துவ மருத்துவமனை ஒன்றை கட்டியுள்ளது.
இந்த மருத்துவமனையில் அனைத்து மருத்துவ சேவைகளுடன் வாரத்தில் 7 நாட்களுக்கு 24 மணி நேரமும் இந்த மருத்துவமனை செயல்படும் என்று தான்ஸ்ரீ ஹானிஃபா சொன்னார்.

இந்த மருந்துவமனை மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்கும். சமுதாயத்திற்கான மருத்துவமனை என்ற தாரக மந்திரத்துடன் இந்த மருத்துவமனை செயல்படவுள்ளது. இதுவே மாஹ்சா மருத்துவமனையின் குறிக்கோளாக உள்ளது.
இந்த மருத்துவமனை நவீன நிபுணத்துவ மருத்துவமனையாக செயல்படும். இந்த மருத்துவமனையில் நோயாளிகளின் பதிவு முதல் அனைத்து சேவைகளும் இணையம், ஆப்ஸ் வாயிலாக வழங்கப்படும். இதில் காகித பயன்பாடுகள் முழுமையாக இல்லை. அனைத்து விதமான பதிவுகளும் கணிமயமாக இருக்கும் என்று மாஹ்சா மருத்துவமனையின் தலைமை செயல்முறை இயக்குநர் டாக்டர் அனிதா ஹானிஃபா குறிப்பிட்டுள்ளார்.
கோல லங்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு மில்லியன் மக்களுக்கு அனைத்து சிகிச்சைகளையும் வழங்கும் முதல் மருத்துவமனையாக மாஹ்சா நவீன நிபுணத்துவ மருத்துவதனை திகழும்.
இந்த மாஹ்சா நவீன நிபுணத்துவ மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்கப்படும் என்று Dr அனிதா சொன்னார்.
இந்த மாஹ்சா நவீன நிபுணத்துவ மருத்துவமனை நியாயமான விலையில் மருத்துவ சேவைகளை மக்களுக்கு வழங்கும். மக்கள் சேவையை முன்வைத்து மாஹ்சா மருத்துவமனை செயல்படும் என்று Dr அனிதா ஹனிஃபா மேலும் சொன்னார்.



