
என் மீது அவதூறு பரப்புவதா? நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் உருட்டல், மிரட்டல்களை கண்டு ஒரு போதும் அஞ்சமாட்டேன் டாக்டர் சத்தியபிரகாஷ் சூளுரை
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
கோலாலம்பூர், மே 23-
உங்கள் உருட்டல், மிரட்டல்களை கண்டு ஒரு போதும் அஞ்சமாட்டேன். என் மீது வீசப்படும் அவதூறுகளுக்கு நீதிமன்றத்தில் பதில் கேட்பேன் என்று உலு சிலாங்கூர் நம்பிக்கைக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் சூளுரைத்துள்ளார்.
பிரபல தொழிலதிபரும் பத்திரிகை உரிமையாளருமான ஒருவர் தனக்கு எதிராக தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருவதால் தனக்கு எதிரான அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவிருப்பதாக டாக்டர் சத்திய பிரகாஷ் தேசம் ஊடகத்திடம் கூறினார்.
இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் அதை பற்றி பேச நான் விரும்பவில்லை. என்னை குறி வைத்து சம்பந்தப்பட்டவரின் பத்திரிக்கையில் தொடர்ந்து அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு வருகிறது. இது குறித்து நான் போலீசில் புகார் செய்துள்ளேன். இது தொடர்பில் விரைவில் வழக்கும் தொடரப்படும் என்று டாக்டர் சத்திய பிரகாஷ் தெரிவித்தார்.
நான் அவரிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லை என்று என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். என்னை பொறுத்த வரையில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதனால் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறேன். மற்றவர்களை போல் போலீஸ் நிலையம், நீதிமன்றம் சென்று வரும் வழக்கம் தனக்கில்லை என்று டாக்டர் சத்திய பிரகாஷ் சொன்னார்.
நீதிமன்றத்திற்கும் போலீஸ் நிலையத்திற்கும் நடையாய் நடக்கும் ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல கடப்பிதழ்கூட இல்லை என்று டாக்டர் சத்தியபிரகாஷ் குற்றம்சாட்டினார்.



