Malaysia

பன்றி பண்ணைகளால் நாட்டின் வரமானத்தை அதிகரிக்கலாம் நவீன முறையில் பன்றி உற்பத்தியை சீரமைக்க வேண்டும்

 

ஈப்போ, ஜுலை 23- இந்நாட்டில் ஆறு மாநிலங்களில் பன்றி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் முதல்நிலையில் தற்போது 85 பன்றி பண்ணைகளுடன் பேராக் மாநிலம் திகழ்ந்து வருகிறது என்று பேராக் மாநில பன்றி உற்பத்தியாளர்கள் நிறுவனத்துடன் சந்திப்பு நிகழ்வில் பேராக் மாநில சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமை , பன்றி மேம்பாட்டுத்துறை மற்றும் இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

இந்த பன்றி பண்ணைகள் விவகாரத்தில் பொதுமக்களிடமிருந்து பல புகார்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, துர்நாற்றம் மற்றும் கழிவுகளை ஆற்றில் வெளியிடுதல். இதனால் ஆற்று நீர் மாசுபடிகிறது, பொதுமக்கள் அந்நீரை பயன்படுத்த முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

பேராக் மாநிலத்தில் பன்றி பண்ணைகள் நவீன முறையில் செயல்பட 2013 ம் ஆண்டில் திட்டங்கள் வரையறுக்கப்பட்டன. இருப்பினும், அவையனைத்தும் எதுவும் எடுபடவில்லை. ஆனால், 2018 ம் ஆண்டில் த்ம்மிடம் வழங்கப்பட்டது. பின் ஆட்சி மாற்றம் தற்போது மீண்டும் இத்துறை தம்மிடம் வழங்கப்பட்டுள்ளதை பற்றி அவர் தெரிவித்தார்.

முன்பு பேராக் மாநிலத்தில் 115 பன்றி பண்ணைகள் செயல்பட்டன. பின்பு, ஏ எஸ் எப் வியாதியால் பன்றிகளுக்கு பாதிப்பு, அதிகமான எண்ணிக்கை பையில் பன்றிகள் இறந்தன. அதன் விளைவு பல பன்றி பண்ணைகள் மூடப்பட்டன. தற்போது இந்த பன்றி பண்ணைகளின் பதிவு மற்றும் அங்கீகாரத்துடன் அனுமதி போன்ற விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று வருகின்றன என்ற தகவலை அவர் பதிவு செய்தார்.

அடுத்தாண்டு மத்தியில் மேலும் முழு அங்கீகாரம் கிடைக்கும் பன்றி பண்ணைகள் அதிகரிக்கலாம். இது 25 ஆக குறையும். அத்துடன், அரசாங்க நிலத்தில் இந்த பன்றி பண்ணைகள் நடத்திவரும் இவர்களுக்கு அந்நிலங்கள் குத்தகை விடப்படலாம். பன்றி வளர்க்கும் முறைகளை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். குறிப்பாக, பன்றியின் தோல் மற்றும் அதன் கழிவு பொருள் வாயிலாக மின்சாரத்தை உருவாக்க முடியும்.

அதோடு, இந்த பன்றி பண்ணைகள் வாயிலாக நாட்டிற்கு வருமானத்தை ஈட்ட முடியும். அத்துடன், அதிகமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும். சிங்கப்பூர் மற்றும் இந்தோனிஷியா போன்ற நாடுகளுக்கு இந்த பன்றி இறைச்சியை ஏற்றுமதி செய்ய முடியும் என்று அவர் உறுதியாக கூறினார்.

இந்த பன்றி இறைச்சியில் அதிக அளவில் புரோட்டின் சத்துகள் உள் ளன. இந்த இறைச்சியை ஒரு சில சமூகத்தினர் உண்டு வருவதால் அவர்கள் கோழி, மீன் போன்ற உணவை குறைத்துக்கொள்கின்றனர். இதனால் நாட்டிற்குதான் நன்மையே. இதனால் புரோட்டின் சத்து அனைவருக்கும் கிடைக்கப்பெற்று வருகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எது எப்படியிருப்பினும் நமது அந்நிய நாட்டிலிருந்து இந்த இறைச்சி இங்கு வராமல் இருக்க தக்க நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். நிறைவுவிழாவில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார் அ.சிவநேசன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button