IndiaInternationalMalaysia

பேராக் திருக்குறள் இயக்கத்தின் ஏற்பாட்டில் திருக்குறள் விழா

 

ஈப்போ, ஜுலை 23: இம்மாத இறுதியில் அதாவது வரும் ஜூலை 28 ஞாயிற்றுக்கிழமை அன்று திருக்குறள் விழா இங்குள்ள புந்தோங் சென்திரக் மண்டபத்தில் காலை மணி 9.30 க்கு நடைபெறவுள்ளது என்று பேராக் மாநில திருக்குறள் இயக்க தலைவர் கனிமொழி குப்புசாமி கூறினார்.

இந்நிகழ்வை பேராக் மாநில மனிதவளம், சுகாதாரம், ஒற்றுமை, இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தொடக்கி வைக்கவுள்ளார்.

இந்நிகழ்வில் தலைமையுரை ஆற்றவுள்ளார் உப்சி பல்கலைக்கழக இணைபேராசிரியர் முனைவர் மனோன்மணிதேவி. அவருடன் திருக்குறள் குறித்த சொற்பொழிவை வழக்கறிஞர் சி.பாண்டித்துரை மற்றும் பாவலர் இரா.திருமாவளவன், தமிழ்நெறிக் கழக தலைவர் ஆகியோர் சொற்பொழிவாற்றவுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தொடக்க மற்றும் இடைநிலை பள்ளி மாணவர்களின் படைப்புகள் இடம்பெறுகின்றன . குறிப்பாக, இளையோர் பாடல்கள், குறுநாடகங்கள் மற்றும் திருக்குறள் குறுநாடகமும் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வை கண்டுகளிக்க மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அன்போடு அழைக்கப்படுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button