
InternationalMalaysia
மலேசியர்கள் பாதுகாப்பான இணையதளத்தை உறுதி செய்ய வேண்டும் அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் வலியுறுத்து
கோலாலம்பூர்,ஜூலை 23-
மலேசியர்கள் பாதுகாப்பான இணையதளத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.
இதில் குறிப்பாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகள் அல்லது மாணவர்களுக்கு ஏற்ற தளத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வழி வகுக்க வேண்டும் என்று அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கேட்டுக் கொண்டார்.
வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகிய செயலிகள் தங்கள் தளங்களில் நடக்கும் குற்றச் செயல்களை ஒடுக்க முன்வர வேண்டும்.
பாலியல் தொல்லைகள், ஆபாசப் படங்கள் விநியோகம் மற்றும் இணைய மோசடிகள் போன்ற புகார்களுக்கு மத்தியில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகள் பயன்படுத்தப்படுவதால் இது அவசியமாகும் என்று அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.



