IndiaInternationalMalaysia

பிரபல ஹீரோ ஹீரோயின்களுடன் ஈப்போவில் திரைப்பட சூட்டிங்

ஈப்போ, ஜுலை 25- இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் ஈப்போ மாநகரில் தமிழ்நாட்டு திரைப்பட குழுவினர் திரைப்பட சூட்டிங் ஒன்றை நடத்த அதற்கான ஏற்பாடுகள் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக இந்த திரைப்படத்தின் இயக்குநர் சுந்தர் பாலு கூறினார்.

இத்திரைப்படத்தில் நான்கு ஹீரோ மற்றும் 4 ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர். குறிப்பாக, பரத், ஸ்ரீகாந்த போன்ற ஹீரோக்களுடன் பிரியா ஆனந்த் போன்ற முன்னணி ஹீரோயின்களும் நடிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது பேராக் மாநில அரசாங்க உதவியுடன் இங்குள்ள திரைப்பட படபிடிப்பு இடங்களை பார்வையிடப்பட்டு வருகிறது. இது ஒரு சண்டை படம் என்பதால் அதற்கான தகுந்த படப்பிடிப்பு இடங்களும் கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக, அதிக ஸ்டான் மாஸ்டர்கள் கொண்டு படக்காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாக அவர் சொன்னார்.

இத்திரைப்பட சூட்டிங் சுமார் 25 முதல் 30 நாட்களுக்கு நடைபெறலாம். குறைந்தபட்சம் 90 சதவீத சூட்டிங் ஈப்போவில் முற்றுப்பெறலாம். மீதமுள்ள சூட்டிங் இந்தியாவில் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு, கர்ஜனை மற்றும் கண்ணித்தீவு திரைப்படத்தை எடுத்த அனுபத்தோடு இம்முறை இது மூன்றாவது படமாக இது அமைந்துள்ளது. இத்திரைப்படம் சுமார் 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இச்சந்திப்பில், பேராக் மாநில தகவல் தொழில்நுட்பத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்லான் ஹெல்மியின் அதிகாரி கி. நோவிந்தனை சந்தித்து பட சூட்டிங் குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button