InternationalMalaysia

ஒலிம்பிக் போட்டி பேர்லி தான் –.தீனா ஜோடி காலிறுதிக்கு தகுமி

 

பேர்லி தான் – மு.தீனா ஜோடி 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் பூப்பந்து விளையாட்டுக்கான குழு நிலை இறுதி ஆட்டத்தில் உலகின் ஒன்பதாம் நிலை பூப்பந்து இரட்டையர்களான இந்தோனேசியாவின் அப்ரியானி ரஹாயு-சித்தி ஃபாடியா சில்வா ராமதாந்தியை தங்களின் அபாரமான ஆட்டத்தின் மூலம் தோற்கடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

அவர்கள் இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-18, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றியை தங்கள் வசப்படுத்தினர். எனவே, இந்த மகத்தான வெற்றியின் மூலம் மலேசிய ஜோடி காலிறுதிக்குள் காலடி எடுத்து வைக்கும் கனவு நினைவானது.

முன்னதாக, இந்த இளம் ஜோடி கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் உலகின் ஆறாம் நிலை விளையாட்டாளர்களான ஜப்பானின் மயூ மாட்சுமோட்டோ-வகானா நாகஹாரா ஜோடியைத் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button