
தொழில்முனைவர்களுக்கான Flame உச்சநிலை மாநாடு வணிகர்கள் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்ட உதவும் நிஷானா அறவாரியத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் நம்பிக்கை
கோலாலம்பூர், மே 29-
மலேசிய இந்தியர்களின் வர்த்தக மேம்பாட்டிற்கு Flame உச்சநிலை மாநாடு முக்கியப் பங்காற்றயுள்ளதாக Yayasan Kishana கிஷானா அறவாரியத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் கூறினார்.
இந்த Flame உச்சநிலை மாநாட்டில் தங்கள் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பும் குறு, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் வாய்ப்பை நன்கு பயன்படுத்ணிக் கொண்டுள்ளதாக நிவாஸ் ராகவன் தெரிவித்தார்.
தொழில்முனைவோர் வர்த்தகத்தில் பீடுநடை போட இது போன்ற நடவடிக்கைகள் உதவும். இலக்கவியல், நிதி மற்றும் நிதி இலக்கவியமயமாக்கம் போன்ற அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இம்முயற்சி வர்த்தக நிறுவனங்களுக்கு உதவும் என்று நிவாஸ் ராகவன் நம்பிக்கை தெரிவித்தார்.
கிஷானா அறவாரியத்தின் (Yayasan Kishana) கீழ் Flame உச்சநிலை மாநாடு கடந்த மே 28ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டரில் ஒருநாள் மாநாடாக நடைபெற்றது. இதில் வர்த்தகர்களுக்கான வாய்ப்புகள் அனைத்தும் அறிமுகம் செய்யப்பட்டதாக நிவாஸ் ராகவன் சொன்னார்.
வங்கி கடன் பெறுவது, அதற்கான ஆவணங்களை தயார் செய்வது, அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகள், நிதியுதவிகள் உள்ளிட்ட அனைத்தும் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டன. இதில் வங்கிகள் உள்ளிட்ட 25 வர்த்தக அமைப்புகள் கலந்து கொண்டதாக நிவாஸ் ராகவன் கூறினார்.
இந்த Flame உச்சநிலை மாநாட்டில் பலவகையான வர்த்தக முகப்புகள் வர்த்தகம் தொடர்பான பல்வேறு சேவைகளை வழங்கிய நிலையில் பங்கேற்பாளர்கள் பலரும் பயனடைந்துள்ளனர்.
இந்த Flame உச்சநிலை மாநாட்டில் இந்திய, மலாய், சீன வர்த்தகர்கள், வங்கி பொறுப்பாளர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



