
2 வெவ்வேறு கட்டுமான தளங்களில் 170 சட்டவிரோத அந்நிய தொழிலாளர்கள் கைது
தேசம் செய்திகள் கவிஅரசன் அன்பரசன்
மலாக்கா ,மே 8-
மலேசிய குடிநுழைவுத்துறைத் துறை பத்து பிரண்டாம் மற்றும் கோத்தா லக்சாமானா 2 கட்டுமான தளங்களில் நடத்திய அதிரடி சோதனையில் 170 சட்டவிரோத அந்நிய தொழிலாளர்களைக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும்
அவர்களில் வங்காளாதேசிகள், நேபாளம், மியான்மர், பாகிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதை மாநில குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் அனிர்வான் ஃபௌசி முகமது ஐனி தெரிவித்தார்

சோதனையின் போது, பலர் கூரையிலும் சிமெண்ட் குவியல்களுக்குப் பின்னாலும் ஒளிந்து கொண்டு தப்பிக்க முயன்றனர்.இந்த நடவடிக்கையில் கண்டறியப்பட்ட குற்றங்களில் அடையாள ஆவணங்கள் இல்லாதது, வருகைக்கான அனுமதி விசா நிபந்தனைகளை மீறுதல், அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதல் நாட்கள் தங்குதல், அங்கீகரிக்கப்படாத அடையாள அட்டைகளைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.இச்சோதனையில் 68 குடிநுழைவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

2 கட்டுமான தளங்களிலும் அதன் முதலாளிகளுக்கு 2 சம்மன்கள் அனுப்பப்பட்டதாகவும், அனைத்து கைதிகளும் மேல் விசாரணை மற்றும் தொடர் நடவடிக்கைகளுக்காக மாச்சாப் உம்பு குடிநுழைவுத்துறை தடுப்புக் காவலில் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.இந்த வழக்கு குடிநுழைவுத்துறை சட்டம் 1959/63, பாஸ்போர்ட் சட்டம் 1966 மற்றும் குடிவரவு விதிமுறைகள் 1963 ஆகியவற்றின் படி விசாரிக்கப்படுகிறது, என்று அவர் கூறினார்.



