
நில அமிழ்வில் புதையுண்ட இந்திய மாதுவைத் தேடி மீட்கும் நடவடிக்கை தொடரப்படும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உறுதி
கோலாலம்பூர்,ஆக.25-
மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வில் புதையுண்ட இந்திய மாதுவை தேடி மீட்க்கும் நடவடிக்கை தொடரப்படும் வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.
அந்த மாதுவின் நிலை கவலையளிக்கிறது. இதற்காக அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மாதுவின் குடும்பத்தினரை கோலாலம்பூர் மாநகர மன்றத்தினர் சந்திந்து ஆறுதல் கூற வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார்..
இந்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவரை தேடி மீட்கும் நடவடிக்கைகள் மூன்றாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை தேதி காலை 8 மணியளவில் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த விஜயலட்சுமி நில அமிழ்வில் புதையுண்டு காணாமல் போனார். இந்த சம்பவத்திற்கு பிறகு மூன்றாவது நாளாக அவரை தேடும் பணிகள் தொடரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



