Malaysia
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கழிவு விலையில் சுவையான கோழி நொறுவைகள்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ,செப்.8-
ஈப்போ மாநகர் அமான் ஜெயா பேருந்து நிலையம்
அருகே அண்மையில்
திறக்கப்பட்ட ‘ ஆயாம் ஃபாக் சேக்’ ( Ayam Pak Sheikh’ தனது பங்காக தமிழ்ப்பள்ளி
மாணவர்களுக்கு கழிவு விலையில் பொறித்த நொருவை கோழி துண்டுகள், நாசி லெமாக், கறி மீ மற்றும் ஏனைய குளிர்பானங்கள்
விற்பனை செய்ய முன் வந்துள்ளது என அதன் நிர்வாகி மாய் ராம்லி தெரிவித்தார்.
ஆகஸ்ட் 3 ஆம் தேதி தனது மேரு கிளை கடையின்
மூலம் இந்த சலுகையை பெற்று
கொள்ளலாம் என்ற அவர் தமிழ்ப்பள்ளி நிர்வாகம் தம்மை நேரில் சந்தித்து சலுகை சம்பந்தப்பட்ட தகவலை பெறலாம் என்றார்.
சுற்று வட்டார இந்தியர்களும் விஜயம் புரிந்து அறுசுவை உணவுகளை சாப்பிட்டு கருத்து சொல்ல வேண்டினார்.



