
துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி தலைமையில் மஇகாவின் 78ஆவது பேராளர் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் தகவல்
கோலாலம்பூர்,செப்.9-
மஇகாவின் பேராளர் மாநாடு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை வரை ஷாஆலம் ஐடிசிசி மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவிருப்பதாக அதன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.
இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 1,400 பேராளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என்று மொத்தம் 1700க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவிருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் டத்தோஸ்ரீ சரவணன் அவ்வாறு தெரிவித்தார்..
இந்த மாநாட்டில் கட்சியின் தேசியத் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கொள்கை உரை நிகழ்த்துவார். இம்மாநாட்டில் 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. மாநில பேரவைகள் போன்று கட்சியின் தலைமைத்துவத்திற்கு முழு ஆதரவு வழங்குவது முதல் தீர்மானமாகும்.
நாட்டில் 3ஆர் எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் குறித்து பேசுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
ஆனால் இந்து மதம் தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை. ஆகையால் அரசாங்கம் எல்லாம் மதத்தினருக்கும் முன்னுரினமை வழங்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட உள்ளதாக டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.
இந்த மாநாட்டில் கட்சியின் எதிர்கால சவால்கள், திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இவை அனைத்தும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி அதிகாரப்பூர்வ பார்வைக்கு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
மஇகாவின் இந்த 78ஆவது பேராளர் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



