Malaysia

ரவாங்கில் டீ மாஸ்டரை அடித்து துன்புறுத்திய விவகாரம் சம்பள பாக்கி 26 ஆயிரம் மற்றும் இழப்பீடு 20 ஆயிரம் வெள்ளி பெற்றுத் தரப்பட்டது மலேசிய மனித நேய இயகத்தின் தலைவர் Dr த.கமலநாதன் தகவல்

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

ரவாங்,செப்.16-
ரவாங்கில் உள்ள ஒரு உணவகத்தில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்த மதுரையை சேர்ந்த தியாகராஜன் பட்டமுத்து (வயது 41) என்பவரை கடை உரிமையாளர் அடித்து காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சம்பள பாக்கி 26 ஆயிரம் வெள்ளி மற்றும் இழப்பீடு 20 ஆயிரம் பெற்றுத் தரப்பட்டதாக உலக மலேசிய மனித நேய இயக்கத்தின் தலைவர் Dr த.கமலநாதன் கூறினார்.

ரவாங் புசாட் பண்டார் ரவாங் எனுமிடத்தில் உள்ள அந்த உணவகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்த தியாகராஜன் என்பவரை வேறு ஒரு நபரை கேட்டு அடித்து துன்புறுத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பில் ரவாங் போலீஸ் நிலையத்திலும் ரவாங் தொழிலாளர் நீதிமன்றத்திலும் புகார் செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளதாக கமலநாதன் தெரிவித்தார்.

அந்த உணவகத்தில் தியாகராஜன் விடுமுறை இல்லாமல் வேலை செய்ததற்கும் கூடுதல் வேலை செய்ததற்கும் ரவாங் தொழிலாளர் நீதிமன்றம் வாயிலாக 26 ஆயிரம் வெள்ளி பெற்றுத்தரப்பட்டது. அதன்பிறகு அவரை அடித்து துன்புறுத்தியதற்கு இழப்பீடாக 20 ஆயிரம் வெள்ளி பெற்றுத்தரப்பட்டது. மேலும் தியாகராஜன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து அவர்கள் கையொப்பமிட்ட மன்னிப்பு கடிதம் ஒன்றும் பெற்று தரப்பட்டதாக தேசம் டிவியிடம் கமலநாதன் சொன்னார்.

இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறையும் தொழிலாளர் நீதிமன்றமும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இந்த வேளையில் அவர்களுக்கு Dr கமலநாதன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஒரு உணவகத்திற்கு தங்கள் குடும்ப உறவுகளை பிரிந்து நம்பி வேலைக்கு வந்தவரை இனிமேல் யாரும் துன்புறுத்தக்கூடாது என்பதற்காக இந்த முறையில் தீர்வு காணப்பட்டு பாக்கி சம்பளமும் இழப்பீடும் பெறப்பட்டதாக Dr கமலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப சூழல் காரணமாக பிழைப்பு தேடி வந்த தம்மை இப்படி சித்திரவதை செய்துள்ள நிலையில் தமக்கு நிதி கிடைக்க செய்த Dr கமலநாதனுக்கு தியாகராஜன் நன்றி தெரிவித்துக் கொண்டார். இன்னும் சில தினங்களில் தியாகராஜன் மதுரை புறப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button