Malaysia
மீன் ஆற்றில் ஜாலோர் கெமிலாங் படகு அணிவகுப்பு. தேசிய கொடி உடையில் குடும்ப உறுப்பினர்கள் பவணி.
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
புக்கிட் கந்தாங், செப்- 18
மலேசிய தின கொண்டாட்டத்தை
மெரு கூட்டும் பொருட்டு இங்குள்ள புக்கிட்
கந்தாங் மீன் ஆற்றில்
ஜாலோர் கெமிலாங் கொடி
அலங்கார படகு
போட்டியில் 31 படகுகள் அலங்காரத்துடன்
அணிவகுத்து சென்றதும் பலரின்
கவனத்தை ஈர்த்தது.
கவந்திழுக்கும் அலங்கார படகில்
குடும்ப உறுப்பினர்கள் நாட்டு கொடி கொண்ட உடையில்
பவணி வர அதனை
பார்த்து பரவசமைந்த உள்ளூர் வாசிகள்
கைத் தட்டல் எழுப்பி உற்சாகமூட்டினர்.
இந்த நிகழ்விற்க்கு உறுதுணையாக
இருந்த மீனவர்களும்
தேச பற்றினை வெளிப்படுத்
தினர்.



