Malaysia

கண்ணதாசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்; மறையாது கண்ணதாசன் விழாவில் டத்தோஸ்ரீ சரவணன் திட்டவட்டம்

கோலாலம்பூர்,ஜூன் 24-
கண்ணதாசன் வாழும் போது அவரை போற்றினார்களோ இல்லையோ, இன்று அவரின் ஆற்றலையும் அவரின் தமிழ் புழமையையும் பாராட்டி புகழ்ந்து கொண்டாடி வருகின்றனர் என்று .
கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

நான் நிரந்தரமானவன், எனக்கு அழவு இல்லை, எந்த சூழ்நிலையிலும் எனக்கு மரணமில்லை என்பது போல் கண்ணதாசன் இன்னமும் நம்மோடு வாழ்ந்து வருகிறார்.
அவரின் கவிதைகளும் பாடல்களும் எந்த காலத்திலும் அழியாதவையாகும் என்று கண்ணதாசன் விழாவில் ம.இ.கா தேசிய துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

கண்ணதாசன் கவிதைகள் மற்றும் பாடல்கள் எல்லா காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு உள்ளன. இதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் நல்ல தமிழை கேட்க விரும்புவதால் கண்ணதாசன் விழாவில் இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்று டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.

கண்ணதாசன் விழாங49ஆவது ஆண்டாக கோலாலம்பூரில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
எதிர்பார்த்ததை விட அதிகமானோர் இந்த கண்ணதாசன் விழாவில் கலந்துக் கொண்டுள்ளனர்.

இதில் குறிப்பாக அதிகமான இளைஞர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.
நல்ல தமிழை கேட்க விரும்புவதாலே கண்ணதாசன் விழாவில் பங்கேற்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதே வேளையில் நல்ல செய்தியை கொண்டு சேர்த்தால் அடுத்த தலைமுறை சரியாக வளரும். ஏதோ செடியை நட்டோம் தானாக வளர்ந்து விடும் என்ற சிந்தனையில் இருந்து நாம் விடுப்பட வேண்டும். இதன் அடிப்படையில்தான் கண்ணதாசன் விழாவை அறவாரியம் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. எதிர்வரும் ஆண்டுகளிலும் இது தொடரும் என்று டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் முத்தாய்ப்பு அங்கமாக தமிழ் ஆர்வாளர்கள், தமிழ் கலைஞர்கள் என ஐவருக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
எழுத்தாளரும் தமிழ் ஆர்வளருமான முரசு நெடுமாறன், கலைமாமணி கலைவாணி, நாட்டின் புகழ்ப்பெற்ற பாடகர்களான எம்.எஸ். பிரிட்டோ, தண்டபாணி டத்தின்ஸ்ரீ கோமதி தெய்வீகன் ஆகியோருக்கு நிகழ்ச்சியின் கதாநாயகனும் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் விருது வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button