Malaysia

“டிமேன்சியா” எதிர்நோக்கும் மக்களுக்கு ஆதரவு வழங்க பேராக் மாநில டிமேன்சியா சங்கமும் ஈப்போ பந்தாய்‌ மருத்துவமனை‌ கைகோர்த்தனர்

ஈப்போ,செப்.26-
மூளையின் நரம்பு செல்கள் சேதமடைந்து நினைவாற்றல்‌ இழப்பது, குழப்பம், என சிக்கல்கள் எதிர்நோக்குவது‌ டிமேன்ஷியா‌ நோயாகும்.

அந்த வகையில் ஈப்போ பந்தாய் மருத்துவமனை தங்களுடைய‌ இடத்தை பேராக் டிமேன்ஷியா‌‌ சங்கத்திற்கு வழங்கியுள்ளனர்.

வாரத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை ஈப்போ பந்தாய் மருத்துவமனையில் டிமேன்ஷியா‌ முகப்பு போடப்பட்டு மக்களுக்கு சேவை வழங்கப்படும் .

இந்த புதிய திட்டத்தின் தொடக்கவிழா அண்மையில் ஈப்போ பந்தாய்‌ மருத்துவமனையில் நடைபெற்றது.

இந்த‌ முகப்புகளில்‌ இருக்கும் பேராக் டிமேன்ஷியா சங்கத்தினர் மக்களுக்கு அது தொடர்பான் சேவை‌, விளக்கத்தை வழங்குவார்கள்.

அதனுடன் முகப்புக்கு அருகில் இலவச‌ காப்பி வழங்கும் இயந்திரும் பொருத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button