மலேசிய இந்துக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் தேசிய புராதன சின்னமாக அங்கீகாரம்: டான்ஸ்ரீ நடராஜா தகவல்
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
பத்துகேவ்ஸ், செப்.27-
கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் புராதன சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா கூறினார்.
கடந்த 1873ஆம் ஆண்டு இந்த ஆலயத்தின் வரலாறு தொடங்கும் நிலையில் இது சக்தி பொருந்திய ஒரு ஆலயமாக திகழ்கிறது. கடந்தாண்டு கும்பாபிஷேகம் கண்ட
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் புராதன சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது இந்துக்களுக்கு பகிழ்ச்சியூட்டும் செய்தியாக உள்ளது என்று பத்துமலை திருத்தலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா அவ்வாறு தெரிவித்தார்.
தேசிய புராதன இலாகாவின் கீழ் இயங்கும் புராதன ஆலயம் என்பதற்கான அங்கீகாரம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இது ஒட்டுமொத்த மலேசிய இந்துக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக தான்ஸ்ரீ நடராஜா சொன்னார்.
கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயம் கருங்கல் ஆலயமாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும். மேலும் பத்துமலையில் மேல்குகைக்கு செல்ல மின் படிக்கட்டுகள், 3 ஆயிரம் பேர் அமரக்கூடிய மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த கட்டுமானங்களுக்கான அனுமதியை நில அலுவலகம், செலயாங் நகராண்மைக் கழகம் துரிதமாக வழங்க வேண்டும். பத்துமலையில் இந்திய கலாச்சார மையமும் விரைவில் திறக்கப்படும் என்று தான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டுள்ளார்.



