Malaysia

பேராக் மாநில ம.இ.கா நிர்வாகக் கூட்டம் தான்ஸ்ரீ இராமசாமி தலைமை தாங்கினார்

ஈப்போ,அக்.10-
பேராக் மாநில ம.இ.காவின் 2024/25 தவணைக்கான நான்காவது செயற்குழு கூட்டம் அதன் தலைவர் தான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்களின் தலைமையில் ஈப்போவில் அமைந்துள்ள மாநில ம.இ.கா அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநிலத்தின் அனைத்து 24 தொகுதிகளைச் சார்ந்த நிர்வாக உறுபினர்கள், மாநில இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் தான்ஸ்ரீ 2024/27 தவணைக்கான மாநில நிர்வாகக்குழு பட்டியலை அறிவித்தார். அடுத்த செயலவைக் கூட்டத்தில் 21 துணைக்குழுக்களுக்கானப் பொறுப்பாளர்களை நியமிக்கவிருப்பதாகவும் கூறினார்.

இம்மாத இறுதியில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி திருநாளையொட்டி தொகுதி வாரியாக உதவிகள் வழங்கும் நிகழ்வு குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது.

தான்ஸ்ரீ எம். இராமசாமி தலைமையிலான பேராக் மாநில ம.இ.கா நிர்வாகத்தினர் அனைத்து இந்தியர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button