Malaysia

பேராக் ம.இ.காவின் புதிய நிர்வாகத்தினர் நியமனம் தான்ஸ்ரீ இராமசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஈப்போ, அக்.10-
பேராக் ம.இ.காவின் புதிய நியமனங்கள் அறிவிப்பு செய்யப்பட்டது. இதில் 10 புதிய முகங்கள் நியமனம் செய்யப்பட்டனர். இரு பழைய முகங்கள் மீண்டும் அவர்களது பதவியில் அமர்த்தப்பட்டனர். மாநில ம.இ.கா செயலாளர் கோ.சண்முகவேலு மற்றும் துணைச்செயலாளர் பெ. சுகுமாறன் தங்கள் பதவிகளில் மீண்டும் இடம் பெற்றனர்.

இந்த புதிய நிர்வாகத்துடன் சிறந்த மக்கள் சேவையை வழங்குவதுதான் உன்னத நோக்கமாகும் என்று ம.இ.காவின் தேசிய உதவித்தலைவரும், பேராக் ம.இ.காவின் தலைவருமாகிய தான்ஸ்ரீ எம்.இராமசாமி நியமனங்களை அறிவித்தபோது கூறினார்.

பேராக் மாநில ம.இ.காவின் புதிய நிர்வாகத்தில், தலைவராக தான்ஸ்ரீ எம். இராமசாமி, துணைத்தலைவராக மு.வீரன், செயலாளராக கோ. சண்முகவேலு, துணைச்செயலாளராக பெ. சுகுமாறன், பொருளாலராக எஸ்.ஜெயகணேஷ், தகவல் பிரிவு தலைவராக ஆர். மகேந்திரன், அமைப்பு செயலாளராக ர.ஜெயகோபாலன், வியூக அதிகாரியாக மூ.மோகன் மற்றும் நிர்வாக செயலாளராக எஸ்.சித்ரா தேவி நியமனம் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இன்னும் ஓரிரு மாதத்தில் மாநில ம இ கா ஆட்சிக்குழுவினர் மற்றும் 21 பிரிவுகளின் தலைவர்கள் அறிவிப்பு செய்யப்படும். கட்சியை ஒற்றுமையுடன் வழிநடத்தினால் வலுப்பெறுவது உறுதியாகும். அதன் அடிப்படையில் கட்சிக்குள் ஒற்றுமையை ஓங்க செய்வோம் என்று அவர் வலியுறுத்தினார்.

பேராக் மாநிலத்தில் 2 இலட்சத்து 49 ஆயிரம் இந்திய வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 70 சதவீத த்தனரை ம இ கா வில் உறுப்பினராக்குவது நமது இலக்காகும் என்று அவர் தம் கருத்தை பதிவு செய்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button