மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் மலேசிய இந்திய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் ஃபாமி ஃபட்சிலின் முதன்மை பத்திரிகை செயலாளர் புவான் ஹனிம் அமைச்சரின் தொடர்பு துறை அதிகாரி டத்தோ சிவபாலனுடன் சந்திப்பு ஊடகவியலாளர்களின் சமூகநலன்கள் விவாதிக்கப்பட்டன
புத்ராஜெயா,செப்.24-
மலேசிய இந்திய ஊடகவியலாளர்களின் பல்வேறு நலன்கள் குறித்து விவாதிக்கும் நோக்கத்தில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் மலேசிய இந்திய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபட்சிலின்
முதன்மை பத்திரிகை செயலாளர் புவான் ஹனிம், அமைச்சரின் தொடர்பு துறை அதிகாரி டத்தோ சிவபாலன் ஆகியோருடன் பிரத்தியேக சந்திப்பு நடத்தப்பட்டன.
இந்த சந்திப்பில் மலேசிய தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் செ.வே.முத்தமிழ்மனன்ன், செயலாளர் வெற்றி விக்டர், உதவித்தலைவர்கள் இ.காளிதாசன், எம்.ரவி, துணை செயலாளர் குணா, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.காளிதாஸ், இராமன்குட்டி ஆகியோர் கலந்து கொண்ட வேளையில் மலேசிய இந்திய ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் குணாளன் மணியம், செயலாளர் நந்தகுமார் ஆகிய இருவர் பங்கேற்றனர்.
இந்த சிறப்பு சந்திப்பில் ஊடகவியலாளர்களின் பல்வேறு சமூகநலன்கள் விவாதிக்கப்பட்டன. இதில் தகவல், தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சிலின் முதன்மை பத்திரிகை செயலாளர் புவான் ஹனிம் மற்றும் அமைச்சரின் தொடர்பு துறை அதிகாரி டத்தோ சிவபாலன் மற்றும் அதிகாரி ஹில்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்வு நல்ல பயனாக அமைந்தது. இதில் மலேசிய தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் செ.வே.முத்தமிழ்மன்னன் மற்றும் வெற்றி விக்டர் இருவரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில் சங்கத்தின் நிதி நிலைமை, அலுவலகம், ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர், பணியாளர்களுக்கு சிறப்பு நிதி, குடும்ப தின விழா, சிறப்பு மானியம் உட்பட பத்து கோரிக்கை குறித்து பேசப்பட்டது.
சங்கத்திற்கு எந்த வகையில் உதவிகள் வழங்க முடியும் என்பது குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல பதிலை வழங்குவதாக புவான் ஹனிம் தெரிவித்தார்.
மலேசிய இந்திய ஊடகவியலாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் குணாளன் மணியம் இந்திய ஊடகவியலாளர்களின் வாய்ப்புகள் குறித்து பேசினார். அரசாங்கத் துறையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கான வழிவகைகளை ஆராயும்படி கேட்டுக் கொண்டார்.
அரசாங்க துறைகளில் குறிப்பாக அமைச்சுகளில் இருக்கும் வாய்ப்புகளை ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும் என்று மலேசிய இந்திய ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் நந்தகுமார் புவான் ஹனிமிடம் வலியுறுத்தினார்.
இந்திய ஊடகவியலாளர்களுக்கு எத்தனையோ வாய்ப்புகள் கிடைப்பதில்லை. பிரதமர் அல்லது அமைச்சர்கள் வெளிநாடு செல்லும் சமயங்களில் அரசாங்க ஊடகங்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் அல்லது அழைப்புகள் கிடைக்கின்றன.தமிழ் ஊடகவியலாளர்கள் முற்றாக தவிர்க்கப்படுகின்றனர். இதனை அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நந்தகுமார் கேட்டுக் கொண்டார்.
இதில் வெற்றி விக்டர் முன்வைத்த சில கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதில் SKIM HAWANA வாயிலாக மலேசிய தமிழ்பத்திரிகையில் உடல் நல குறைவால் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் முன்னாள் பத்திரிகையாளர்களுக்கு , அமைச்சர் நேரடியாக வருகை தந்து உதவி நிதி வழங்குவார். அந்த பட்டியலை தயார் செய்யும்படி அதிகாரி கோரிக்கை வைத்தார்.
அதோடு சங்கத்திற்கு ஒரு அலுவலகம் அமைச்சின் வாயிலாக தலைநகரில் வழங்கவதாக நமக்கு சாதமாக கூறப்பட்டது.
அமைச்சின் வாயிலாக மீடியா தொழிநுட்ப பயிற்சி செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது.
அமைச்சின் கீழ் செயல்படும் கவுன்சிலில் மலேசிய தமிழ்ப் பத்திரிகை சார்ந்த ஒரு பிரதிநிதி அமர்த்தபடுவார்.
நிருபர், புகைப்பட கலைஞர்களுக்கு சிறப்பு பெட்ரோல் சலுகை அட்டை, நல்ல திட்டம் அமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்கிறோம் என்று பதில் கொடுத்தனர்.
சங்கத்திற்கு ஆண்டுதோறும் ஒரு சிறப்பு நிதி வழங்க கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதனை அமைச்சர் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டது.



