InternationalMalaysia

ஊடகவியலாளர்களை மிரட்டும் அரசியல்வாதிகளின் செயல்! தீபகற்ப மலேசிய ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்! மலேசிய இந்திய ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் குணாளன் மணியத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு

கோலாலம்பூர், மே 23-

தமிழ் ஊடகவியலாளர்களை தாக்கி செய்தி வெளியிடுவதுடன் அவர்களை மிரட்டும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் போராட்டத்தில் இறங்கியுள்ள MIJA எனப்படும் மலேசிய இந்திய ஊடகவியலாளர் சங்கத்திற்கு துணை நிற்கப் போவதாக செயலை தீபகற்ப மலேசிய ஊடகவியலாளர் சங்கம் கூறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் தகவல், தொடர் துறை அமைச்சர் பாஃமி பாட்சிலை சந்திக்க திட்டமிட்டுள்ள மலேசிய இந்திய ஊடகவியலாளர் சங்கத்திற்கு துணை நிற்கப் போவதாக தீபகற்ப மலேசிய ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் தே அதிரா முகமட் யூடோப் ஊடக
அறிக்கை ஒன்றில் கூறினார்.

இந்த விவகாரத்தை நாங்கள் கடுமையாக கருதுகிறோம். இது குறித்து எங்கள் கண்டனத்தை தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள ஊடகவியலாளர்களான பி.புவனேஸ்வரன் மற்றும் எம்.பவளச்செல்வன் ஆகியோரின் பாதுகாப்பு கருதியும் ஊடகவியலாளர்களை மதிக்க வேண்டும்ஓ என்பதை வலியுறுத்தியும் சங்கத்தின் செயலாளர் தே அதிரா முகமட் யூடோப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் தமிழ் இணைய ஊடகங்கள், தமிழ்ப்பத்திரிகை ஆகியவற்றுக்கு சம்பந்தப்பட்ட அரசியல்வாதி மானநஷட வழக்கையும் தொடுத்துள்ளனர். ஆகையால் தீபகற்ப மலேசிய ஊடகவியலாளர் சங்கம் அமைச்சர் ஃபாமி ஃபட்ஸிலை நேரடியாக தொடர்புக் கொண்டு இந்த விவகாரத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் ஊடகச் சுதந்திரமும் காற்கவும் ஊடகவியலாளர் பாதுகாப்பும் காக்கப்பட வேண்டும். மேலும் மக்கள் பிரச்சினைகளையும் உண்மை செய்திகளையும் வெளியிடுவதற்கு ஊடகவியலாளர்களுக்கு எந்த தடையும் இருக்கக்கூடாது.

இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் போலீஸ் புகார் செய்துள்ளனர். ஆகையால் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் இந்த விவகாரத்தின் தொடர் நடவடிக்கையை தீபகற்ப மலேசிய ஊடகவியலாளர் சங்கம் கண்காணிப்பதுடன் உறுதுணையாக செயல்படும். ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர் பாதுகாப்பையும் உறுதி செய்ய நாட்டிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என தே அதிரா முகமட் யூசோப் வலியுறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button