Uncategorized
கிராம மக்களை அச்சுறுத்திய 14 காட்டு யானைகள் காட்டு பகுதிக்கு மாற்றம்.
தேசம் செய்திகள் சாரா
கிரிக், செப்-18
பண்டாரிங் கம்போங் பத்து அன்னாம், தங்சோங் ரிம்புன் கிராம மக்களை
அச்சுறுத்தி வந்த
மூன்று மாத பெண் குட்டி யானை உட்பட 14 காட்டு யானைகள் வேறொரு காட்டு வளப்பகுதிக்கு மாற்றப்பட்டதாக
பேராக வன விலங்கு இலாகா இயக்குனர் யூசோப் ஷாரிப் தெரிவித்தார்.
சென்ற செப்டாம்பர் 5 ஆம் தேதி தொடக்கம் சென்ற 14 ஆம் தேதி வரை
மேற் கொள்ளப்பட்ட
நடவடிக்கையில்
3 மாதம் – 35 ஆண்டுகள் வயது நிரம்பிய முறையே
6 ஆண் யானைகள்
மற்றும் 8 பெண் யானைகள்
வேறொரு காட்டு வளப் பகுதிக்கு
மாற்றப்பட்டதாக
கூறினார்.



