
Malaysia
கெ அடிலான் ஈப்போ தீமோர் தொகுதி தீபாவளி உபசரிப்பு மலாய், சீன அன்பர்கள் வாழ்த்து
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, நவ.14-
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி உபசரிப்பை நடத்தும் கெ ஆடிலான் ஈப்போ தீமோர் தொகுதி
பொறுப்பாளர்கள்
இம் முறை மலாய், சீன இன அன்பர்களை அழைத்து ஒற்றுமை உணர்வு பளிச்சிடும் வகையில் கொண்டாட வழி வகுத்துள்ளது என்றால் அது மிகையாகாது.
தொகுதி தலைவர் கைருல் பின் சாலே தலைமையில் முன்னாள் போலிஸ் அதிகாரிகளான
ராஜு ஆசிர்வாதம், செல்வராஜ் சூசை, விஜியன் முத்துசங்கிலி , குமாரி சாந்தி ஆகியோர் பங்களிப்புடன் இனிதே சிறப்புடன்
கொண்டாடப்பட
பிற இன அன்பர்கள்
பிரதான இடம் ஒண்றித்து தீபாவளி நல்வாழ்த்துகள் என தமிழில் முழங்கிய போது கைத்தட்டல் பலமாக இருந்தது.
உரையாற்றிய தொகுதி தலைவர்,
மலாய், சீன கெ அடிலான் உறுப்பினர்கள் வேறுபாடின்றி கலந்து ஒற்றுமையை
பேண அறிவுறுத்தினார்.



