Malaysia

பிரதமரின் சிறப்பு ஒதுக்கீடு 89 ஆலயங்கள், 1 தேவாலயத்திற்கு 31 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி மானியம் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் வழங்கினார்

கோலாலம்பூர்,டிச 22-
பிரதமரின் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 89 ஆலயங்கள் மற்றும் 1 தேவாலயத்திற்கு 31 லட்சத்து 70,000 வெள்ளி வழங்கப்பட்டதாக தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நேரடி மானியத்தின் கீழ் இந்த இந்த உதவி நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.
மலேசிய வரலாற்றில் முதல் முறையாக 89 கோவில்களுக்கு ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய மானியம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்று டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு இந்த வேளையில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிதி ஆலய நிர்வாகங்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று நம்புவதாக டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

இந்திய சமுதாயத்தின் நலன் கருதி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் டத்தோஸ்ரீ ரமணன் இதற்கு முன்னர் இந்திய தொழில் முனைவோருக்கு பல வகைகளில் உதவிக் கரம் நீட்டியுள்ளார்.

இப்போது நாட்டில் உள்ள இந்து கோவில்களில் மேம்பாட்டிற்கும் உதவும் வகையில் பிரதமர் துறையின் நேரடி மானியத்தை பெற்று தந்து பேருதவி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button